

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் ம.பேச்சியம்மாள் அறிக்கை:
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை ( 5.2.2021) காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பல்வேறு முன்னணிதனியார் நிறுவனத்தினர் பங்கேற்கவுள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ,ஐடிஐ மற்றும் கணினி பயிற்சிகல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம். தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 6380089119 என்ற அலுவலக செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்