திருவள்ளூரில் வரும் 5-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூரில் வரும் 5-ம் தேதி  வேலைவாய்ப்பு முகாம்
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச்இறுதி முதல் வேலைவாய்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டது. தற்போது, 10 மாதங்களுக்குப் பிறகு வரும் 5-ம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஆகியவை நடைபெற உள்ளன.

இம்முகாமில், பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களில் உள்ளகாலி பணியிடங்கள், பயிற்சியிடங்களுக்கு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ முடித்தவர்களை தேர்வு செய்ய உள்ளன.

எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in