மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர்கள் சங்கத்தினர் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தி னருக்கு தலா ரூ.5 கோடி நிதி உதவி வழங்க வேண்டும், மீன்பிடி தொழிலையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்டப் பொதுச்செயலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் பி.லிங்கம், முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி உட்பட பலர் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in