சசிகலாவுக்கு ஆதரவாக சிவகங்கை, தேனியில் போஸ்டர்

சசிகலாவுக்கு ஆதரவாக சிவகங்கை, தேனியில் போஸ்டர்
Updated on
1 min read

சிவகங்கை, தேனியில் சசிகலா வுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அமைச்சர் ஜி.பாஸ்கரனின் தொகுதியான சிவகங்கையில் ‘சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் ’ எனக் குறிப்பிட்டு அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் துணைச் செயலாளர் செல்வகணபதி என்பவர் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். ஏற்கெனவே தேவகோட்டையில் சசிகலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டிய நிலையில், தற்போது சிவகங்கையிலும் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்டிபட்டியில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணித் தலைவர் பண்ணை சின்னராஜா என்பவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று ஆண்டிபட்டியில் அதிமுக மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒன்றிய துணைச் செயலாளர் கே.செல்லப்பாண்டி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்iது.

இதில் கிளைக்கழகப் பொரு ளாளர் எம்.குமார், கிளை பிரதிநிதி எம்.சத்யநாதன், கிளை துணைச் செயலாளர் ஏ.கவுதம் ஆகியோர் பெயர்களும், படங்களும் இடம்பெற்றுள்ளன.

போஸ்டரில் தமிழ்நாட்டை வழிநடத்த வரும் அதிமுக.பொதுச் செயலாளர் புரட்சித் தலைவியின் புனித அவதாரமே என்று சசிகலாவை குறிப்பிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in