இறைச்சிக் கடைக்காரர் கொலை கழிவு நீர் குட்டையில் உடல் மீட்பு

இறைச்சிக் கடைக்காரர் கொலை கழிவு நீர் குட்டையில் உடல் மீட்பு
Updated on
1 min read

இறைச்சிக் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டு கழிவு நீர் குட்டையில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்தி வேலூர் பாமகவுண்டம்பாளையத்தில் கழிவு நீர் குட்டை உள்ளது. அந்தக் குட்டையில் துர்நாற்றம் வீசுவ துடன், சாக்குமூட்டை ஒன்று மிதப்பதாகவும் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

புகாரின்பேரில் பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜராணவீரன் தலைமையில் நல்லூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் மிதந்த சாக்குமூட்டையை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மூட்டையில் பிரேதம் ஒன்று கட்டப்பட்டு கிடந்தது. விசாரணையில் சோழ சிராமணியைச் சேர்ந்த இறைச்சிக் கடை உரிமையாளர் சரவணன் என்பதும், அவா் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி குளத்தில் வீசப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in