மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்
Updated on
1 min read

ஆரோவில் அருகே கோட்டக் கரை பகுதியைச் சேர்ந்தவர் அரிராம் மகன் ஆனந்த்(29).தச்சு தொழிலாளியான இவருக்கும், ஏழுமலை மகள் நவநீதம்(24) என்பவருக்கும் கடந்த 2008-ம்ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த2014 பிப்ரவரி 25-ல் மதுபோதையில் இருந்த ஆனந்த், மனைவி நவநீதத்தை சந்தேகப்பட்டு கத்தியால் வெட்டினார். பலத்த காயமடைந்த நவநீதம் இறந்தார். ஆரோவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன் றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் ஆனந்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in