

தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை, என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடன் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கருத்து கேட்டு வருகிறேன். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மக்களின் பொருளாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிந்து வருகிறேன்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆட்சியில் இருந்தபோது கல்விக் கடனை ரத்து செய்யாத திமுக இப்போது எப்படி கடனை ரத்து செய்ய முடியும். நடக்கக் கூடியதை, செய்யக் கூடியதை தேர்தல் வாக்குறுதிகளாக கூறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.