

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி நாமக்கல் அரசுப் போக்குவரத்துக் கழக கிளைப் பணிமனை எதிரில் தொழிற்சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
எல்பிஃஎப் நாமக்கல் கிளைச் செயலாளர் டி. பிரகாசம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர்.தியாகராஜன், எஸ்.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன செயலாளர் என்.முருகராஜ், சிஐடியு நிர்வாகி எம்.பழனிசாமி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். போராட்டத்தில், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத் தப்பட்டன. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்.முருகேசன், எஸ்.பாலகிருஷ்ணன், டி.பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
கிருஷ்ணகிரி
இதேபோல், புறநகர் பணிமனை முன்பு நடந்த உண்ணாவிரப்போராட்டத்துக்கு பணிமனை தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார்.