Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

திருப்பூர் அருகே அலகுமலையில் 31-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதிகட்ட பணி ஆய்வு காயமடையும் காளைகள், வீரர்களுக்கு மருத்துவ ஏற்பாடுகள்

திருப்பூர்

திருப்பூர் அருகே அலகுமலையில் வரும் 31-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு பல்வேறு மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில், 4-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அமரும் 400 அடி நீளம் கொண்ட கேலரிகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்பதால், போட்டி நடைபெறும் இடத்துக்கு காளைகளை கொண்டு வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டியின்போது காளைகள் பிடிக்கப்படும் இடம், மருத்துவ முகாம் அமைய உள்ள இடங்களை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.

கரோனா சான்று கட்டாயம்

இதுதொடர்பாக சுகாதாரம், கால்நடைத் துறையினர் கூறும்போது, "கரோனா பரிசோதனை (ஸ்வாப்) மேற்கொண்ட வீரர்களில், தொற்று இல்லை என உறுதியானவர்கள் மட்டுமே காளைகளை பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். அந்தந்த ஊர்களில் ஸ்வாப் பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான சான்றுடன் வீரர்கள் வர வேண்டும். அதேபோல, இன்று (ஜன.29) நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலருக்கும் சுகாதாரத்துறை சார்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்று இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டியின்போது காளைகளுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க இரண்டு கால்நடை ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவர்கள் 30 பேர், சிகிச்சை குழுவினர் 60 பேர் களத்தில் இருப்பர். வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சை அளிக்க மருத்துவ சிகிச்சை குழுவினர் 70-க்கும் மேற்பட்டோர் இருப்பர்.

குறைந்தது 500 வீர்ர்கள், 700 காளைகள் களமிறங்கும் என எதிர்பார்க்கிறோம். பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் பகுதியில், பல்வேறு இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்படுகின்றன. யூ-டியூப்., லோக்கல் சேனல்களிலும் திரையிடப்படுகிறது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x