கரோனா தொற்று குறைந்ததால்திருப்பூர் சித்தா சிகிச்சை மையம் மூடல்

கரோனா தொற்று குறைந்ததால்திருப்பூர் சித்தா சிகிச்சை மையம் மூடல்
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற, கடந்த ஆண்டு ஆக.1-ம் தேதி மாவட்ட நிர்வாகத்தால் காங்கயம் சாலையிலுள்ள தனியார் பள்ளியில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. பாதிப்பு குறைந்ததால் இந்த மையம் மூடப்பட்டது.இதுதொடர்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் கூறும்போது, "கரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும், சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலும் இந்த மையம் திறக்கப்பட்டது. மருத்துவர்களும் போதுமான அளவுக்கு இருந்து, நோயாளிகளை கண்காணித்து வந்தனர். கரோனா பாதித்த ஒருவர்கூட சித்தா சிகிச்சை மையத்தில் உயிரிழக்கவில்லை. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதையடுத்து, ஆட்சியர் அறிவுறுத்தல்படி தற்போது சித்தா சிகிச்சை மையம் மூடப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 1225, பெண்கள் 589, குழந்தைகள் 43 பேர் என 1857 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in