மசினகுடியில் அனுமதியற்ற 55 விடுதிகளுக்கு நோட்டீஸ்

மசினகுடியில் அனுமதியற்ற  55 விடுதிகளுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகேமாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில் தங்கும் விடுதிக்குள் உணவு தேடி வந்த யானையை விரட்ட, விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தீ வைத்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விடுதியின் உரிமையாளர் மல்லனின் மகன் ரேமண்ட் டீன் மற்றும் ஊழியர் பிரசாத் ஆகியோரை வனத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான ரிக்கி ரயானை தேடி வருகின்றனர். 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு வனத் துறை பரிந்துரைத்துள்ளது.

மசினகுடி பகுதியில் அனுமதியற்ற தங்கும் விடுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, ‘சீல்’வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கூடலூர் வட்டாரவளர்ச்சி அதிகாரி ஜனார்தனன் தலைமையிலான குழுவினர், 55விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதில் ‘வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு விடுதியாக நடத்துகிறீர்கள். உரிய அனுமதி பெற்று முறைப்படுத்திய பின் விடுதிகளை திறக்கலாம். அதுவரை விடுதிகளை மூட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, மசினகுடி பகுதியில் இயங்கிவந்த 33 விடுதிகளை அவற்றின் உரிமையாளர்கள் மூடியுள்ளனர்.

இது குறித்து தனியார் விடுதிகள் சங்கத் தலைவர் சலாம் கூறும்போது, “எங்கள் சங்கத்தில் 33 விடுதிகள் உள்ளன. முறைப்படி வணிகரீதியாக விடுதி வரி, தண்ணீர் வரி, மின்சாரம் உள்ளிட்டவை செலுத்திவருகிறோம். அனுமதியின்றி செயல்படும் விடுதிகளை கண்டறிந்து மூட வேண்டும். மசினகுடி ஊராட்சி சார்பில் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமேவிடுதிகளை முறைப்படுத்திஅனுமதி அளிக்கட்டும். அதுவரை நாங்கள் விடுதிகளை மூடுகிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in