Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

புதுவை மீன்வளத் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.35 கோடி ஒப்புதல் 2 வாரத்தில் துறைமுகம் தூர்வாரும் பணி தொடங்கும் என செயலர் தகவல்

மீன்வளத் திட்டங்களுக்கு மத்தியஅரசு ரூ.35 கோடிக்கு ஒப்புதல்அளித்துள்ளது என்று மீன்வளத் துறை செயலர் பூர்வா கார்க் தெரி வித்தார்.

புதுச்சேரி மீன்வளத்துறை செயலர் பூர்வா கார்க் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் 0413-2227289 என்ற ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், இந்த எண்ணில் திட்டங்கள் தொடர் பான தகவல்களை பெறலாம். கட்டணமில்லாத தொலைபேசி ஒன் றும் உருவாக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ரூ.48 லட்சத்தில் உயிர்காப்பு மிதவை, பாதுகாப்பு அடை, டிரான்ஸ்பாண்டர் வாங்க பயனாளிகள் பங்களிப்புடன் கூடியஉதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பிரதமரின் மத்திய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் மீன்வள வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.34.85 கோடிக்கு மத்திய அரசுஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் 5 ஆண்டுக்கு நடைமுறைப் படுத்தப்படும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு பங்குத்தொகையான ரூ.19.81 கோடியில் முதல் தவணை யாக ரூ.6 கோடி பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிய மீன் வளர்ப்பு குளம் கட்டுமானம், நன்னீர் மீன் வளர்ப்பு இடுபொருள் மானியம், உவர் நீர் மீன் வளர்ப்பு, மானியம், வீட்டின் பின்புறம் அலங்கார மீன் வளர்ப்பு, 10 டன்பனிக்கட்டி உற்பத்தி நிலைய கட்டு மானம், குளிரூட்டப்பட்ட வாகனம் உள்ளிட்ட 18 திட்டங்கள் அடங்கும்.

இத்திட்டங்கள் பற்றிய விவரங்களை மீன்வளத்துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விருப்பம் உள்ள வர்கள் விண்ணப்பங்களை மீன் வளத்துறை அலுவலகத்தில் பெறலாம். இத்திட்டத்தில் பொதுப் பிரிவுக்கு 40 சதவீதம், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 60 சதவீத மானியம் மத்திய அரசு பங்குத் தொகை வழங்கப்படும். மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும்.

புதுவை துறைமுகம் தூர்வாரும் பணி 2 வாரத்தில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் நீண்டகால கோரிக் கையான துறைமுகத்தில் தடை யில்லாமல் ஐஸ்கட்டி தயாரிக்கும் பணியை தொடங்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலில் கழிவுநீர் கலப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதில் பல துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். எனவே இதுகுறித்து வரைவு அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x