

நாராயணசாமியின் தவறான செயல்பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கி சென்றுள்ளது என்று பாஜகவில் இணைந்த பிறகு நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் உட்கட்சி பூசலால் அங்கிருந்து விலகிய நமச்சிவாயம் நேற்று டெல்லியில் பாஜகவில் இணைந்தார்.
அதன் பிறகு நமச்சிவாயம் கூறுகையில், “வளமான புதுச்சே ரிதான் எங்கள் எண்ணம். அதற்காக பாஜகவில் இணைந்துள்ளோம். புதுச்சேரிக்கு மோடி வளர்ச்சியை உருவாக்கி கொடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி, உலகளவில் இந்தியாவை தலை நிமிரச் செய்தவர். இந்தியா மோடி தலைமையில் ஒளிர்கிறது. அதுபோல் புதுச்சேரியும் ஒளிர வேண்டும் என்பதே நோக்கம்.
முதல்வர் நாராயணசாமியின் தவறான செயல்பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கி சென் றுள்ளது.
அதை முன்னோக்கி கொண்டு செல்லவும், புதுச்சேரி வளர்ச்சிக்காகவும் இம்முடிவு எடுத்துள்ளோம்.
நிச்சயமாக புதுச்சேரியில் பாஜக ஆட்சியை கொண்டுவர பாடுபடுவோம். மக்கள் தயாராக உள்ளனர். 2021-ல் பாஜக ஆட்சி மலர்வது உறுதி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை நிறுவ இரவு பகலாக பாடுபடுவோம்” என்று தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு மோடி வளர்ச்சியை உருவாக்கி கொடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது. இந்தியா மோடி தலைமையில் ஒளிர்கிறது.