Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் மதுரை காக்கா தோப்பில் உள்ள மாவட்டக் குழு அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.1-ம் தேதி சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநில துணைப் பொதுச் செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!