Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

பிரான்மலை உச்சிக்கு செல்ல முயன்ற இயக்குநர் கவுதமன் தடுத்து நிறுத்தம் பேச்சுவார்த்தைக்குப் பின் போலீஸார் அனுமதி

சிவகங்கை மாவட்டம், சிங்கம்பு ணரி அருகே பிரான்மலை உச்சிக்கு பொங்கல் வைக்க சென்ற பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தினரை போலீஸார் தடுத்து நிறுத்தியால் இருதரப் புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிரான்மலையை தனியாரிடம் இருந்து மீட்க பறம்புமலை பாது காப்பு இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த இயக்கத்தினர் பிரான்மலை உச்சியில் உள்ள முருகன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்த தமிழ் பேரரசு கட்சி தலைவரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன், தமிழக மக்கள் மன்றத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் சென்றனர்.

வேல் ஏந்தி சென்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்குப் பிறகு அவர்களை பொங்கல் வைக்க போலீஸார் அனுமதித்தனர். தொடர்ந்து அவர்கள் மலையில் ஏறிச் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். பிறகு பறம்பு மலையை மீட்போம் என கோஷ மிட்டனர். அதன் பிறகு இயக்குநர் கவுதமன் கூறியதாவது:

சசிகலா விடுதலை செய்யப்பட்ட நாளில், அவசர அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் திறந்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசியலில் தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் நன்மை தரக்கூடிய வழியில் சசிகலா பயணப்பட வேண்டும். அறுபடை வீடுகள் அமைந்துள்ள கோயில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும். காப்பவர்கள் கைகளில் மட்டும் வேல் இருக்க வேண்டும். அதை கெட்டவர்கள் கையிலெ டுத்தால் அது அவர்கள் மீதே பாய்ந்துவிடும், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x