

சேலம் ஸ்வர்ணபுரி விஎஸ் செல்வ மாளிகை ஜுவல்லரியில் புதிய கோரல் (புட்டிக்) பிரிவு அறிமுக விழா நடைபெற்றது.
புதிய பிரிவை விஎஸ் செல்வ மாளிகை ஜுவல்லர்ஸ் பங்குதாரர் மாணிக்கம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக கடை உரிமையாளர் செல்வகுமார் கூறியதாவது:
சேலத்தில் முதல் முறையாக புதிய கோரல் (புட்டிக்) பிரிவை தொடங்கியுள்ளோம். இங்கு ஹெரிடேஜ் கலெக்ஷன்ஸ், டெம்பிள் கலெக்ஷன்ஸ், மீனா காரி ஒர்க்ஸ், வெட்டிங் ஜூவல்லரி, மகாராணி கலெக் ஷன்ஸ் போன்ற எண்ணற்ற மாடல்கள் தனித்துவமாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், விசாலாட்சி செல்வகுமார், ஹர் சண்முகம், நேத்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜுவல்லரி மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.