

சேலம் சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நடை பெற்றது.
சோனா கல்விக் குழுமத் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்து பேசும்போது, “அண்மைக் காலமாக இயற்கை மற்றும் யோகா மருத்துவப்படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இவ்வாய்ப்பை பயன்படுத்தி, மருத்துவத் துறையில் மாணவர்கள் சாதனைகளை புரிய வேண்டும்” என்றார்.
கல்லூரி மேலாண்மை அறங்காவலர் தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்து பேசும்போது, “இந்திய பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையை பயின்று ஒவ்வொருவரும் பயனடைய வேண்டும் என்பதற்காக இயற்கை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவத் துறையில் பெரிய மாற்றம் உருவாகும்” என்றார்.முன்னதாக கல்லூரி முதல்வர் டாக்டர் மதன்குமார் வரவேற்றார். முதலாமாண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி வகுப்புகளை தொடங்கிவைத்தனர்.
இயற்கை மருத்துவர் எஸ்.என்.மூர்த்தி, சேலம் கோகுலம் மருத்துவமனை தலைவர் டாக்டர் அர்த்தனாரி, பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் குழந்தைவேல், சிதம்பரம், கோபால் ஐபிஎஸ், கல்லல் கருப்பையா, ஜீசன் அலி, கோபிநாத் நாயர், டாக்டர் சசி, சோனா கல்வி குழும முதல்வர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், காதர் நவாஷ், கவிதா, பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.