வெளிமாநிலத்தவர் தமிழகத்துக்குள் நுழைய அனுமதிச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் தமிழ்த் தேசிய பேரியக்கம் கோரிக்கை

வெளிமாநிலத்தவர் தமிழகத்துக்குள் நுழைய அனுமதிச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் தமிழ்த் தேசிய பேரியக்கம் கோரிக்கை
Updated on
1 min read

வடமாநிலத்தவரால் நிகழ்த்தப்படும் தொடர் கொலை, கொள்ளை நிகழ்வுகளை தடுக்கும் விதமாக, தமிழகத்தில் வெளிமாநிலத்தவர் நுழைய உள் அனுமதிச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வடமாநில கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை, கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்க ளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் குடியேறும் வடமாநிலத்தவருக்கு எவ்வித பதிவு முறையும் இல்லாததால், ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்ட பல கொள்ளையர்கள், தமிழகத்தில் குடியேறி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

எந்தவிதப் பதிவும் இல்லாத தால், பல வழக்குகளில் வடமாநில கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக போலீஸார் திணறுகின்றனர்.

எனவே, தமிழகத்தில் வெளிமாநிலத்தவரின் குடியேற்றத்துக்கு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே குடியேறியுள்ள வெளிமாநிலத்தவரை படிப்படியாக வெளியேற்ற வேண்டும். மேலும், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வெளிமாநிலத்தவர் நுழைவதற்கு, மத்திய அரசால் ‘உள் அனுமதிச்சீட்டு முறை' (Inner Line Permit) செயல்படுத்தப்படுவதைப் போல, தமிழகத்துக்குள்ளும் பிற மாநிலத்தவர் நுழைய உள் அனுமதிச்சீட்டு முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in