Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

மதுரை பள்ளிகளில் 72-வது குடியரசு தினவிழா உற்சாகம்

திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில், முதல்வர் நா. சுந்தரவாணி தேசியக் கொடி யேற்றினார்.

மதுரை எஸ்பிஓஏ சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவுக்கு, தாளாளர் அ. செந்தில்ரமேஷ் தலைமை வகித்தார். முதல்வர் சபுரால்பானு இப்ராகீம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் அ. அருள்ஜெகன் வரவேற்றார்.

எஸ்பிஐ கிளை மேலாளர் எஸ்.ஜெகன், தேசியக்கொடி ஏற்றினார். மாணவர் சாய்கிருஷ் ஹரிஹரன், மாணவியர் பிரதிபா, சக்தி ஹரிணி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். ஆசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்.

கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஷேக்நபி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ் செய்திருந்தார். மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராவணன் தலைமையில் விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் சுந்தர் கொடியேற்றினார். சுகாதார அலுவலர் முரளி, பள்ளி நூலகத்துக்குப் புத்தகங்களை வழங்கினார். புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்காக மாணவர்களான பாலசந்தர், பாலகுமார் (இரட்டையர்) ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

அ.வல்லாளபட்டி பள்ளியில் நடந்த விழாவுக்குத் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கிராமக் கல்விக்குழுத் தலைவர் கலிங்கமலை, உதவித் தலைமை ஆசிரியர் வாசிமலை முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மகேந்திரன் தேசியக்கொடி ஏற்றினார்.

திருப்பரங்குன்றம் அரசு மேல்நி லைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவகாமி ஜெயக்கொடி தலைமையில் விழா நடைபெற்றது.

சாமநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கோமதி தலைமையில் விழா நடை பெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் செல்வம் தேசியக்கொடி ஏற்றினார்.

கொண்டபெத்தான் நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியர் தென்ன வன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் சீமான் தேசியக் கொடியை ஏற்றினார். ஆசிரியை ஈஸ்வரி, ஊராட்சி துணைத் தலைவர் பஞ்சவர்ணம், வார்டு உறுப்பினர்கள் பூங் கோதை, வைரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் (எண் 2) நடந்த விழாவுக்கு முதல்வர் ஏ.ஜெரால்டு தலைமை வகித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார்.

விழாவில், தேசிய அறிவியல் செயல்திட்டப் போட்டியில் விருதுக்குத் தேர்வான மாணவி பி.ஐஸ்வர்யாவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் ஆத்மானந்தம் நன்றி கூறினார்.

எஸ்பிஓஏ பதின்ம மேனிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, முதல்வர் எஸ்.சீதாலெட்சுமி தலைமை வகித்தார். பேராசிரியர் டி.ராமகிருஷ்ணன் தேசியக் கொடி ஏற்றினார். மாணவி பி.வினிஷா வரவேற்றார். பி.சிவதர்ஷன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x