சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினவிழா

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினவிழா
Updated on
1 min read

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், துணைவேந்தர் ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து என்சிசி, பல்கலை. வளாக பாதுகாப்பு முன்னாள் ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) வசீகரன், தேர்வாணையர் (பொ) கண்ணபிரான், நிதி அலுவலர் கருணாநிதி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், குருமூர்த்தி, சங்கரநாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவர் பிரபு கொடியேற்றினார். ராதை வரவேற்றார். பள்ளிச் செயலர் கார்த்தி, முதல்வர் ராஜ்குமார் பங்கேற்றனர். புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொருளாளர் முகமது மீரா கொடியேற்றினார். தாளாளர் சுவாமிநாதன், பள்ளிக்குழுத் தலைவர் கிருஷ்ணன் பங்கேற்றனர்.

காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஹேமமாலினி கொடியேற்றினார். வித்யாகிரி கல்விக் குழுமங்களில் நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா தலைமை வகித்தார். அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அருணாச்சலம் கொடியேற்றினார். ஊராட்சித் தலைவர் சுப்பையா, தலைமை ஆசிரியர் பிரிட்டோ பங்கேற்றனர். சிவகங்கை தாய் இல்லத்தில் நிறுவனர் புஷ்பராஜ் தலைமையில் குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் கொடியேற்றினார்.

பட்டிமன்ற நடுவர் அன்புத்துரை, ஒன்றியக் குழு உறுப்பினர் கோவிந்தன், இல்லக் காப்பாளர் சகாயராணி பங்கேற்றனர். அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமையில் செவிலியர் சந்தானலட்சுமி கொடியேற்றினார்.

காளையார்கோவில் கிழக்கு பள்ளியில் தலைமை ஆசிரியர் தாமஸ்அமலநாதன் கொடியேற்றினார். ஆசிரியர்கள் ஜோதி முத்துநகை, தேவி செசிலியா, ரேணுகாதேவி, மல்லிகா, விஜயஅரசி, சாந்தி பங்கேற்றனர். தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மருத்துவர் முத்துவடிவு கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், ஆசிரியர் செல்வமீனா பங்கேற்றனர்.

ராஜகம்பீரத்தில் காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நடந்த விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன் கொடியேற்றினார்.

காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு ஒருங்கிணைப்புச் செயலாளர் ராஜாராம், செயலாளர் சேவியர், ஊராட்சித் தலைவர் முஜீபுர் ரகுமான் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in