Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் முகக்கவசம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் 370 தொடக்கப் பள்ளிகள், 116 நடுநிலைப் பள்ளிகள், 59 உயர்நிலைப் பள்ளிகள், 63 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 608 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு கரோனா தொற்று தடுப்புக்காக முகக்கவசம், கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை (ரூ.51.29 லட்சம் மதிப்பீட்டில்) ‘மொபிஸ் இந்தியா’ என்ற தனியார் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.

முன்னதாக காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியருக்கு கரோனா தொற்று பாதுகாப்பு பொருட்களை, ‘மொபிஸ் இந்தியா’ சார்பில் நேற்று காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், ’மொபிஸ் இந்தியா’ நிறுவன மனிதவள இயக்குநர் பிரேம் சாய், பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x