அனுமதியின்றி டிராக்டர்கள் ஊர்வலம் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

அனுமதியின்றி டிராக்டர்கள் ஊர்வலம் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

Published on

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (ஜன.26) ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் அனுமதியின்றி விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் டிராக்டரில் ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. நாடு முழுவதும் கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகமான அளவில் மக்கள் கூடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போராட்டங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதே போன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி, சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன் ஆகியோரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in