மூன்றரை அடி உயர மாற்றுத்திறனாளிகள் காதல் திருமணம் சிவகங்கை அருகே உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து

மூன்றரை அடி உயர மாற்றுத்திறனாளிகள் காதல் திருமணம் சிவகங்கை அருகே உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து
Updated on
1 min read

சிவகங்கை அருகே காதல் திரு மணம் செய்து கொண்ட மூன்றரை அடி உயர மாற்றுத்திறனாளிகளை உறவினர்கள், நண்பர்கள் வாழ்த் தினர்.

சிவகங்கை அருகே ஒக்கூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெய பாண்டி மகன் சின்னக்கருப்பு (24). மூன்றரை அடி உயரமே உள்ள இவர் ஒன்பதாம் வகுப்பு வரைப் படித்துவிட்டு ஆடு, மாடு மேய்த்து வருகிறார். இந்நிலையில் 22 வயதான இவரது தம்பி மணிகண் டனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

இதையறிந்த சின்னக்கருப்பு தனக்கும் திருமணம் செய்து வைக்குமாறு கூறினார். ஆனால், வருமானம் இல்லாததால் திரு மணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் மதுரை மாவட் டம் அழகர்கோவில் அருகே பஞ்சம்தாங்கிபட்டியில் உள்ள உற வினர் வீட்டுக்கு சின்னக்கருப்பு சென்று வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெரிய கருப்பன் மகள் பஞ்சு (20) என் பவரை சந்தித்தார். அவரும் 9-ம் வகுப்பு வரை படித்த மூன்றரை அடி உயரம் உள்ள மாற்றுத் திறனாளி. இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை. மனம் தளராமல் நண்பர்கள் மூல மாக தொடர்ந்து பேசி தங்களது பெற்றோரிடம் சம்மதம் பெற்றனர்.

இதையடுத்து நேற்று ஒக்கூர் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களை உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in