

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கொண்டாடும் தகுதி திமுகவுக்கு மட்டுமே உள்ளது என்று தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கூறினார்.
விருதுநகரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பேசுகையில், தேர்தல் களம் நமக்கு புதிதல்ல. மொழிப்போர் களமும் நமக்குப் புதிதல்ல. வீர வணக்க நாள் கொண்டாட தகுதி உள்ள இயக்கம் திமுக மட்டுமே. அதிமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?
சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற வேண்டும் என்றார். சீனிவாசன் எம்.எல்.ஏ., நகரச் செயலாளர் தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.