

தென்காசி மாவட்டம், இடைகால் அருகே உள்ள நயினாகரம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (57). இவர், நேற்று இடைகால் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி நின்றுகொண்டு, கீழே குதிக்கப் போதாகக் கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் தீயணைப்புப் படையினர் மற்றும் போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
நயினாகரத்தில் உள்ளஅனைத்து சமுதாயத்தின ருக்கு பாத்தியப்பட்ட கோயில்திருவிழாவில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை அனுமதிக்க வில்லை என்றும், அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் பாக்கியராஜ் கூறினார். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, பாக்கியராஜ் சமாதானம் அடைந்தார். தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் டவரில் ஏறி, அவரை மீட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, பாக்கியராஜ் சமாதானம் அடைந்தார்.