தி.மலை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் ரத்து

தி.மலை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் ரத்து

Published on

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணா மலை மாவட்டத்தில் குடியரசு தினத்தில் (இன்று) நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.

ஆனால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குடியரசு தினத்தில் (இன்று) நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும், சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in