உயர் மின்கோபுர திட்டங்களால் பாதிப்பு நிலத்தின் பட்டா நகலை எரித்து போராட்டம்

உயர் மின்கோபுர திட்டங்களால் பாதிப்பு நிலத்தின் பட்டா நகலை எரித்து போராட்டம்

Published on

உயர் மின்கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காங்கயம் அருகே 5-வது நாளாக விவசாயிகள் காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நிலத்தின் பட்டா நகலை எரித்து முழக்கங்கள் எழுப்பினர்.

உயர் மின்கோபுரங்கள் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர்மின் வழித்தட திட்டத்தை சாலையோரம் புதைவடமாக (கேபிள்) அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கயம் அருகே படியூரில் கடந்த 20-ம் தேதிதொடர் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது. 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கொமதேக மேற்கு மாவட்ட ச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாயிகள் அணிசெயலாளர் கே.தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,விவசாயிகள் தங்கள் நிலத்தின்பட்டா நகலை எரித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in