

திருப்பூர் - அவிநாசி சாலையை சேர்ந்தவர் குமார். இவரது நண்பர் சேகர். இருவரும் இணைந்து ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனியில் சாய ஆலை நடத்தி வருகின்றனர்.
நிறுவனத்தின் அருகே உள்ள அறையில் சில தொழிலாளர்கள்தங்கியிருந்துள்ளனர். நேற்று மாலை ஆலையின் ஒரு பகுதியிலிருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் நிலைய அலுவலர் பாஸ்கர் தலைமையில் 2 வாகனங்களில் சென்ற வடக்கு தீயணைப்புத் துறையினர், 2 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர்.
இதில் ஆலையில் இருந்த இயந்திரங்கள், துணிகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.