Published : 25 Jan 2021 03:15 AM
Last Updated : 25 Jan 2021 03:15 AM

காட்டுமன்னார்கோவிலில் மினி கிளினிக் திறப்பு

காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி பகுதிகளில் 3 இடங்களில் மினி கிளிக் திறக்கப்பட்டது.

காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சங்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குகஞ்சங்கொல்லை, குமராட்சி அருகே உள்ள கருப்பூர் ஊராட்சி, தில்லைநாயபுரம் ஊராட்சி ஆகிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன், முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அருண்மொழித்தேவன், முகம்மது முஜாமல், ஊராட்சி மன்ற தலைவர் நதியா மாரியப்பன், முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் வினிதா சிவகுநாதன் , அட்மா சங்க தலைவர் வாசு முருகையன், கள்ளிப்பாடி சண்முகம், ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், எய்யலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர்செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x