லாரி ஓட்டுநரை தாக்கியவர் கைது

லாரி ஓட்டுநரை தாக்கியவர் கைது

Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் வடமலம்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமார் (40). இவர், போச்சம்பள்ளி அடுத்துள்ள ஜிம்மாண்டியூர் ஏரி பகுதியில் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது 3 நபர்கள் அப்பகுதியில் சாலையின் மையப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியபடி இருந்துள்ளனர். அவர்களிடம் லாரிக்கு வழி விடும்படி குமார் கேட்டுள்ளார்.

அப்போது மது அருந்திக் கொண்டிருந்த 3 பேரும் குமாரை தாக்கினர். குமார் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில், லாரி ஓட்டுநர் குமாரை தாக்கியது சபரிநாதன் (29), மாதப்பன் (45) மற்றும் பெரியசாமி(27) என தெரிய வந்தது. இவர்களில் சபரிநாதனை கைது செய்த போலீஸார் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in