‘மருத்துவர்களின் உண்ணாவிரதத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது’

‘மருத்துவர்களின் உண்ணாவிரதத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது’
Updated on
1 min read

பிப்.1 முதல் நடைபெறும் மருத்துவர்களின் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தால், பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என அகில இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் ஜெயலால் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

மத்திய அரசு அனைத்து மருத்துவ முறைகளையும் ஒன்றிணைத்து, கலப்பு மருத்துவ முறையைக் கொண்டு வரு வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் அலோபதி, ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி என பல்வேறு மருத்துவ முறை களில் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு துறையும் தனித்தனிச் சிறப்பு வாய்ந்தது. இவை அனைத்தும் தனித்தனி வகையிலே பொது மக்களுக்குத் தேவையானவை.

ஆனால், இவற்றை ஒன்றோடு ஒன்று கலந்து சிகிச்சை அளித்தால் பொதுமக்களுக்கு ஆபத்தானதாகவும், பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத் தக்கூடியதாகவும் இருக்கும்.

எனவே, இந்தக் கலப்பு மருத்துவத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் பிப்.1 முதல் பிப்.14 வரை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் மருத்துவர்களுடன் இணைந்து, மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள், மாண வர்களும் பங்கேற்க உள்ளனர்.

அகிம்சை முறையில் எங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதற்காகவே உண்ணாவிரதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். எனவே, நாங்கள் மருத்துவ மனைகளை மூடவில்லை. இப்போராட்டத்தினால் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in