

செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவில் வன்னியர் நகர், கொள்ளை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சன்னியாசி. இவரது மனைவி தனலட்சுமி (25). இவர் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள கூட்டுறவு வங்கியில்தனது நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வாங்கிஉள்ளார்.
பின்னர் வீடு திரும்புவதற்காக இருசக்கர வாகனம் அருகே வந்தபோது, அவ்வழியே வந்த ஒருவர் கீழே பணம் கிடப்பதாக தனலட்சுமியிடம் கூறினார். அவர் கீழே பணத்தைத் தேடியபோது, மர்ம நபர், இருசக்கர வாகன சீட்டில் இருந்த பையை கைப்பற்றி தப்பிச் சென்றார்.
அதில் நகை அடகு வைத்து பெற்ற பணம், வங்கி பாஸ்புக், அடகு ரசீது இருந்ததாக காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. மறைமலை நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
ரூ.10 ஆயிரம் திருட்டு