காரில் திடீர் தீ விபத்து தம்பதி தப்பினர்

காரில் திடீர் தீ விபத்து தம்பதி தப்பினர்
Updated on
1 min read

விருதுநகரில் சாலையில் சென்ற கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் சென்ற தம்பதி தப்பினர்.

சென்னை புதிய பெருங்களத்தூர் ஆர்.எம்.கே.நகரைச் சேர்ந்தவர் சதீஷ்கிருஷ்ணமூர்த்தி(31). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துச்செல்வி. நெல்லையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு மதுரையில் உள்ள தனது மாமனார் வீட்டிலிருந்து சதீஷ்கிருஷ்ணமூர்த்தியும் முத்துச் செல்வியும் புறப் பட்டுள்ளனர். காரை சதீஷ்கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்துள்ளார்.

திருமங்கலம்- விருதுநகர் நான்கு வழிச் சாலையில் சத்திர ரெட்டியபட்டி அருகே வந்தபோது காரின் முன்பக்கத்திலிருந்து புகை வந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட சதீஷ்கிருஷ்ணமூர்த்தி உடனடி யாக காரை நிறுத்தினார். அதற் குள் தீ வேகமாக காரில் பரவியது. முத்துச்செல்வியும் காரிலிருந்து வேகமாக கீழே இறங்கியதால் இருவரும் உயிர் தப்பினர். கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in