தேனியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தேனி பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்த தொழிற் சங்கத்தினர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தேனி பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்த தொழிற் சங்கத்தினர்.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் சட்ட திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி மாவட்ட ஏஐடியூசி செயலாளர் எம்எஸ்பி.ராஜ்குமார் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளர் டி.ஜெயபாண்டி, ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலாளர் என்.ரவிமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

இதில் எல்டிஎப் மாவட்டச் செயலாளர் சர்க்கரை முருகன், விவசாய சங்க நிர்வாகிகள் வி.ராஜேந்திரன், விஎன். ராமராஜ் உட்படபலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in