

மத்திய பனைப் பொருட்கள் நிறுவனம் சார்பில் சேலம் சாமுண்டி காம்ப்ளக்ஸில் உள்ள பயிற்சி நிலையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வரும் 25-ம் தேதி முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை பத்து நாட்களுக்கு நடக்கிறது. இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண்-பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதித்துறை நிறுவனங்கள், நகை அடமான கடை நடத்த தகுதி பெற்றவர்கள். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இரண்டு புகைப்படம், முகவரிச் சான்றிதழ், கல்விச்சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டணம் ரூ.6,254 செலுத்த வேண்டும்.
மேலும், விவரங்கள் அறிய விரும்புபவர்கள் 94437-28438 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.