அரசு பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் வார விழா

பெண் குழந்தைகளின் கனவு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய மாவட்ட திட்ட அலுவலர் கந்தன்.
பெண் குழந்தைகளின் கனவு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய மாவட்ட திட்ட அலுவலர் கந்தன்.
Updated on
1 min read

சமூக நலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் வார விழா தி.மலை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகளின் மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமை வகித்தார். அப்போது அவர், மாணவிகளுக்கு கல்வியில் முக்கியத்துவம் குறித்தும், குழந்தைதிருமணத்தால் ஏற்படும் விளைவு கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் அவர், பெண் குழந்தை களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சிரமங்கள் குறித்து 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.

"பெண் குழந்தைகளின் கனவு" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் 95 மாணவி கள் பங்கேற்றனர். இதில் சிறந்தஓவியங்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

இதைத்தொடர்ந்து, அங்கன் வாடி பணியாளர்கள் நடத்திய நாடகத்தின் வாயிலாக ‘குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள்’ மற்றும் ‘பெண் சிசு கொலை தடுத்தல்’ குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவி களுக்கு மருத்துவத் துறை மூலம் ரத்தசோகை கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முன்ன தாக பெண் குழந்தைகளை பாது காப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா, பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலை குமாரி, மருத்துவ அலுவலர் தாமரை, மேற்பார்வையாளர்கள் மகேஸ்வரி, பவுனு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in