பட்டியலின சாதிகளான பறையர், சாம்பவர், வள்ளுவர் உள்ளிட்ட 64 உட்பிரிவு சாதிகளை ஒருங்கிணைத்து ஆதி திராவிடர் என அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆதி திராவிடர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது

பட்டியலின சாதிகளான பறையர், சாம்பவர், வள்ளுவர் உள்ளிட்ட 64 உட்பிரிவு சாதிகளை ஒருங்கிணைத்து ஆதி திராவிடர் என அரசாணை  வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆதி திராவிடர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது
Updated on
1 min read

பட்டியலின சாதிகளான பறையர், சாம்பவர், வள்ளுவர் உள்ளிட்ட 64 உட்பிரிவு சாதிகளை ஒருங்கிணைத்து ஆதி திராவிடர் என அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆதி திராவிடர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆதி திராவிடர் கூட்டமைப்பு, ஆதி திராவிட உட்பிரிவு சாதிகளின் நிர்வாகிகள், முன்னணி பிரதிநிதிகளின் மாநாடு தேனியில் கடந்த 9-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவர் முத்துராமலிங்கம் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்டியலின சாதிகளான பறையர், சாம்பவர், வள்ளுவர் உள்ளிட்ட 64 உட்பிரிவு சாதிகளை ஒருங்கிணைத்து ஆதி திராவிடர் என அரசாணை வெளியிட வேண்டும். சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தும்போது 64 உட்பிரிவு சாதிகளை ஆதி திராவிடர் என்றே பதிவிட வேண்டும்.

பட்டியலின இடஒதுக்கீடான 18 சதவீதத்ததை 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 21 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

தமிழக அமைச்சரவையில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உயர்நிலை கண்காணிப்புக் குழு ஆண்டுக்கு இரு முறை கூட வேண்டும் என்ற விதியை அரசு நடைமுறைப்படுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in