சிவகங்கை அருகே 21 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு? விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சிவகங்கை அருகே 21 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு? விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Updated on
1 min read

போலி ஆவணங்கள் மூலம் 21 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் புகார் குறித்து விசாரிக்க சிவகங் கை ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.

சிவகங்கை அருகே ஒக்கூரைச் சேர்ந்த மாதவன், ஆட்சியரிடம் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கும், எனது உறவினர்களுக்கும் சொந்தமான 7.5 ஏக்கர் நிலம் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலம் 21 ஏக்கரை சிலர் போலி ஆவணம் மூலம் பட்டா வாங்கி அபகரித்துவிட்டனர். 2005-க்கு முன்பாக இந்த நிலம் தொடர்பான ஆவணம் சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகம், ஒக்கூர் விஏஓ அலுவலகத்தில் இல்லை. மேலும் ஆவணங்கள் கிழிக்கப்பட் டுள்ளன. அதனால் போலி ஆவணங்கள் மூலம் வாங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் புகார் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் லதா விசாரிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். சிவகங்கை வட்டாட்சியர் மைலாவதி கூறுகையில், ஆவணங்களை மறைக்க முடியாது. அவர் யூ.டி.ஆர்-ல் தான் பட்டா மாறியுள்ளதாக கூறியுள்ளார். யூ.டி.ஆர்-ல் மாறியதை மாவட்ட வருவாய் அலுவலர்தான் விசாரிக்க முடியும். அவர் இரு தரப்பையும் அழைத்து விசாரிப்பார் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in