

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாருக்கு சொந்தமான 147 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற ஏதுவாக பள்ளிக்கு தலா ஒரு சுகாதார பொறுப்பாசிரியர் வீதம் 147 சுகாதார பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் தலைமையில் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி கரோனா பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகள் குறித்தும், ஊட்டச்சத்து மற்றும் துத்தநாகம் மாத்திரைகள் சாப்பிடும் முறைகள் குறித்தும் விளக்கமளித்தார். இதில், பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமீனாள், வேப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் குழந்தைராசன், மாவட்டக் கொள்ளைநோய் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.