Regional02
ராகுல் காந்தி ஜன.25-ல் வேடசந்தூர் வருகை
வேடசந்தூருக்கு ஜனவரி 25-ம் தேதி வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் அப்துல்கனிராஜா தலைமை வகித்தார். காங்கிரஸ் பொதுச்செயலர் வரதராஜன், மாநிலச் செயலர் சலீம்சேட் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வரும் 25-ம் தேதி கரூர் செல்லும் வழியில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு வரும் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
