

பழநியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் பழநி வருவர். இதனால் 350 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
தேவைக்கேற்ப கூடுதல் பேருந்து களும் இயக்க உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.