சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Updated on
1 min read

அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமைவகித்து பேசும்போது, “மாணவர்கள் கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் போது கட்டாயம் தலைக் கவசம் அணிந்து வர வேண்டும். வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கக்கூடாது. கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்றார். மாணவர் மன்ற செயலர் காமராஜ் தலைமையில் 30- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். நிகழ்வில், ஒரு வழிப்பாதையில் வாகனங்களை இயக்கமாட்டோம், பேருந்தில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் பயணம் செய்யமாட்டோம், அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டமாட்டோம் என்பன உட்பட பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றனர். நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in