

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர் உணவகத்தை நேற்று தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன் திறந்துவைத்தார்.
மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன், ஐ.ஜி.பெரியய்யா, டி.ஐ.ஜி. நரேந்திரன்நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, கூடுதல் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், ஜெயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.