Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

அரியமான் கடற்கரையில் ஜன.23-ல் பீச் விளையாட்டு திருவிழா

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:

அரியமான் கடற்கரையில், ஜன.23-ல் பீச் விளையாட்டுத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா கொண்டாடப்படும்.

அன்றைய தினம் ஆடவர்களுக்கான வாலிபால் (இரட்டையர்) மற்றும் கால்பந்து (ஐவர்) போட்டிகள் (வயது வரம்பு இல்லை) நடத்தப்படவுள்ளது.

இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று தேர்வு ஜன.22-ல் அரியமான் கடற்கரையில் நடைபெறும். தேர்வுக்கு வரும்போது ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்துவர வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் மட்டும் வரும் 23-ம் தேதியன்று பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இப்போட்டிகளுக்கான ஏற்பாட்டினை ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் மற்றும் கால்பந்து சங்கங்கள் செய்து வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு வாலிபால் போட்டிக்கு ரமேஷ்பாபுவை 8148259600 என்ற எண்ணிலும், கால்பந்து போட்டிக்கு குலசேகரபாண்டியனை 9443783327 என்ற எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703509 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x