Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள், விவசாய சங்கங்கள் போராட்டம்

மழையால் சேதமடைந்த நெற் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள், விவசாய சங்கத்தினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகை கடைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று சாலை மறிய லில் ஈடுபட்டனர். ஒன்றியச் செயலாளர் செல்வம் தலைமை வகித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கனமழை யால் பாதிக்கப்பட்ட அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களுக்கு ஏக்க ருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டத்தின்கீழ், அறுவடை ஆய்வை கைவிட்டு, 100 சதவீத இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற 15 பெண்கள் உட்பட 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, திருமருகல் பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றியச் செயலாளர் தங்கையன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 105 பேரை திட்டச்சேரி போலீஸாரும், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநிலக் குழு உறுப்பினர் இடும்பையன் தலை மையில் சாலை மறியலில் ஈடு பட்ட 11 பேரை மயிலாடுதுறை போலீஸாரும் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார தலைநகரங்களிலும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர் ரயிலடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட் டச் செயலாளர் பாலசுந்தரம், மாவட்டத் தலைவர் வீரமோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.துரைமாணிக்கம் நிறைவுரையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று 50 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் எம்.பி செல்வராஜ், பி.எஸ்.மாசிலாமணி, கோட்டூரில் வை.சிவபுண்ணியம், மாரிமுத்து, திருத்துறைப்பூண்டியில் முன்னாள் எம்எல்ஏக்கள் பழனிசாமி, உலக நாதன், ஒன்றியக்குழுத் தலைவர் பாஸ்கர், சவளக்காரனில் வை.செல்வராஜ், துரை.அருள் ராஜன், காசாங்குளத்தில் வீரமணி ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத் துக்கு, ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி தலைமை வகித்தார். இதே போல, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, அன்னவாசல், கீரனூரிலும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப் பட்ட மக்காச்சோளம், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை கைகளில் ஏந்திக் கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x