சிதம்பரம் பகுதியில் ஆற்றை கடந்து செல்ல 2 படகுகளை எம்எல்ஏ வழங்கினார்

வடக்கு பிச்சாவரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உப்பனாற்றை கடந்து செல்ல அப்பகுதி மக்களுக்கு படகு வழங்கும் பாண்டியன் எம்எல்ஏ.
வடக்கு பிச்சாவரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உப்பனாற்றை கடந்து செல்ல அப்பகுதி மக்களுக்கு படகு வழங்கும் பாண்டியன் எம்எல்ஏ.
Updated on
1 min read

சிதம்பரம் பகுதியில் 2 கிராம மக்களுக்கு ஆற்றை கடந்து செல்ல கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ சொந்த செலவில் 2 படகுகளை வழங்கினார்.

பரங்கிப்பேட்டை ஒன்றியத் துக்கு உட்பட்ட வடக்கு பிச்சாவ ரம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வடக்கு பிச்சாவரம் கிராமத்தில் இருந்து கிள்ளைபகுதிக்கு உப்பனாற்றின் வழியேபொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல ஏதுவாக ஒரு படகினை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் சொந்த செலவில் வாங்கி பொதுமக்களிடம் வழங்கி னார். இது போல குமராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட கீழகுண்டலபாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச் சியில், கீழகுண்டலபாடி பகுதியில் இருந்து பழைய கொள்ளிடம் ஆற்றின் வழியே பொதுமக்கள் ஆற்றைகடந்து செல்ல ஏதுவாக சிதம்பரம்சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண் டியன் புதிதாக படகினை சொந்த செலவில் வாங்கி பொதுமக்களிடம் வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா ளர் அசோகன், ஒன்றிய குழு தலை வர் கருணாநிதி, குமராட்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சுந்தரமூர்த்தி, அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in