வக்காளர் இறுதி பட்டியல் நாளை வெளியீடு நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

வக்காளர் இறுதி பட்டியல் நாளை வெளியீடு நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 01.01.2021-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம்-2021-ன் வாக்காளர் இறுதி பட்டியல் நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் நாளை (ஜன.20) காலை 10.00 மணிக்கு உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்படவுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வாக்குச்சாவடிகளில் 20-ம் தேதி முதல் வாக்காளர் இறுதி பட்டியலை பார்வையிடலாம். அதில் திருத்தங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் நேரில் வந்தோ அல்லது nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் வாக்காளர் உதவி மையம் எண் 0423-1950 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in