Regional02
தேனி எம்பி அலுவலகத்தை முற்றுகையிட இளைஞர் பெருமன்றத்தினர் முயற்சி
மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக பெரியகுளத்தில் உள்ள தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அலுவலகத்தை முற்றுகையிட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் முடிவு செய்தனர். இதற்காகப் பெரியகுளம் தென்கரையில் இருந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நேற்று பேரணியாக வந்தனர். இதற்கு நகரச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். வைகை அணை சாலை பிரிவு அருகே வந்தபோது பேரணியில் பங்கேற்ற 30 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
