Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

ஆதரவற்றோரின் சடலங்களை அடக்கம் செய்ய அமைதி வனம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் இறந்த ஆதரவற்றவர் கள் மற்றும் உரிமை கோரப்படா தோரின் சடலங்களை அடக்கம் செய்ய தனியாக அமைதி வனம் என்ற அடக்கஸ்தலம் அமைக்கப் பட்டுள்ளது.

அமைதி வனம் அடக்கஸ் தலத்தை மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் பின்புறம் பாமணி ஆற்றங் கரையில் சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து மன்னார்குடி நகராட்சி மூலம் உருவாக்கியுள்ளன.

அனைத்து சேவை சங்கங்களை ஒருங்கிணைத்து செயல்படும் நேசக்கரம் அமைப்பின் தலைவர் மன்னார்குடி காவிரி எஸ்.ரங்க நாதன் தலைமையில், மன்னார்குடி டிஎஸ்பி இளஞ்செழியன், மன்னார்குடி நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் அமைதி வனத்தில் நேற்று முன்தினம் மரக்கன்றுகளை நடவு செய்தனர். மன்னார்குடி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த், சேவை சங்கத் தலைவர்களான லயன்ஸ் குணசேகரன், ஜேசிஐ வி.எஸ்.கோவிந்தராஜன், ரோட்டரி சுதாகரன், ரமேஷ், நுகர்வோர் அமைப்பு பத்மநாபன், பசுமைக்கரம் கைலாசம், இந்தியன் ரெட்கிராஸ் கண்ணன், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், மன்னார்குடி அரசு மருத்துவமனை சவக்கிடங்கு ஊழியர்கள், நகராட்சி அமைதி வன பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

ஆதரவற்ற நிலையிலும், உரிமை கோரப்படாமலும் கைவி டப்பட்ட சடலங்களை அடக்கம் செய்வது சமூகக் கடமை என்பதை உணர்ந்து, இந்த அடக் கஸ் தலத்தை நகராட்சி மற்றும் காவல்துறை அனுமதியுடன் உருவாக்கியிருப்பதாக நேசக்கரம் அமைப்பினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x