Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக பிரச்சார கூட்டங்களில் பெண்கள், தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் பெரம்பலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் ராஜபூபதி, ஒன்றியச் செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x